வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டவெஹெரகல விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி திடீரென வீதியைக் கடந்த நபரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் குறித்த நபர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் வீதியைக் கடந்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இதில் மூன்று வயது குழந்தையும், 63 வயதான ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.