10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் – சற்று முன் ஆரம்பம்.!

0
111

10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது.

இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் முதலில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்று பிற்பகல் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் அர்ச்சுனா தனது லைவ் விடீயோவை பாராளமன்றத்தில் இருந்து வெளியிட்டிருக்கிறார்.

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தார் அர்ஜுனா இராமநாதன்.

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவிக்க, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டுள்ளார் அர்ஜுனா..

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்.. ஆனால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவித்துள்ளனர், சம்பிரதாயத்தை மாற்றத்தானே இங்கு வந்திருக்கிறேன் என பதிலளித்துள்ளார். அர்ச்சனா இராமநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here