2024 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 டிசெம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் மற்றும் அன்றைய திகதிக்குப் பிறகு பாடசாலை விடுமுறைகள் தொடங்கும்.
அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஜனவரி 02 மீண்டும் தொடங்கும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.