வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட இருமல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துருகிரிய, பொரலுகொட வீதியை சேர்ந்த அனுர சம்பத் அமரசேகர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் உணவு உட்கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் வடை சாப்பிட்டுள்ளதுடன், இதன்போது திடீரென இருமலுடன் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.