கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
27

ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (21 ) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது கல்முனைக்குடி 9 பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும்,

கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.

கைதான 2 சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here