அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்துறை வீரமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
வீரமுனை நூலகத்திற்கு சற்று தொலைவில் நேற்று வியாழக்கிழமை இரவு 07.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், அலவக்கரை வீதி வீரமுனையை சேர்ந்த மதன் பவி லக்சான் (வயது 23) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கள், மாட்டுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சடலம் மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றும் நேற்று நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரிக்கும் விபத்திகளால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பாதுகாப்பாக வனங்களை செலுத்துவோம்.