வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீதி ஆட்டொ மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

0
102

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராமை வீதியில் மஹா லேவாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

தொழினுட்ப கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here