இவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்.. வடக்கு மக்களிடம் பொலிஸாரின் அவசர வேண்டுகோள்.!

0
99

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீதுவ பகுதியை சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியை சேர்ந்த w.a.d சமன் ரணசிங்க என்பவர்கள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பாரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடிவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.

குறித்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0789776397 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) ஆகியோரின் தொடர்பிலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here