யாழில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்.!

0
66

பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், காணெளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்தோடு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here