பதுளையில் இளைஞனுக்கு நடந்த சம்பவம்.. சிக்கிய குற்றவாளி.!

0
78

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பதுளை, கொஸ்லந்த – அளுத்வெல ஆமதுரு கந்த காட்டில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆராவேகம தனமல்வில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18 ம் திகதி தனது மகனை காணவில்லை என உயிரிழந்த நபரின் தாயார் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இறுதியாக உஸ்வெல்ல பலஹருவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் அழுத்வெல ஆமதுருகந்த காட்டிற்கு கஞ்சா வளர்ப்பதற்காக சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் 45 வயதுடைய குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது ஆமதுருகந்த காட்டுப்பகுதியில் குறித்த நபரின் தலையை துண்டித்து தலையை புதைத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தனமல்வில பொலிஸார் கொஸ்லந்தை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து கொஸ்லந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். கொலைக்கான காரணம் ஒரு பெண்ணுடன் இருந்த தகாத உறவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பண்டாரவளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸாரும் கொஸ்லந்தை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here