7 கோடி கொள்ளையிட்ட சம்பவம் – யாழில் பதுங்கியுள்ள பிரதான சந்தேக நபர்கள்.!

0
16

மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, ​​7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்திய நிலையில், அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணப் பகுதியில் இருப்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

அதன்படி, சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற காரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here