பல்கலைக்கழக மாணவன் ஒருவர் எடுத்த முடிவு.!

0
66

அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (21) கொழும்பு ஜம்பட்டா தெருவில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது…

அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த பல்கலை மாணவன் கொழும்பு மருதானை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் மின்சார தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சியில் ஈடுபடுவதற்காக கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில் ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

சம்பவத்தன்று பல்கலைக்கழக மாணவன் இரவு உணவு எடுத்து வருவதாக கூறி விகாரையின் விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் வெகு நேரமாகியும் குறித்த மாணவன் திரும்பி வராததால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் மலசலகூட கதவினை தட்டியுள்ளனர்.

கழிவறை கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து கதவை உடைத்தனர். விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்திய கத்தியும் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கழிவறை கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மாணவன் உயிரை மாய்ப்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here