15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி திடீர் சுகயீனமுற்று நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்த சிறுமியின் தாயுடன் நீண்ட காலமாகத் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.