மீண்டும் CSK அணியில் அஸ்வின்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

0
84

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Live Update –

  • குவின்டன் டி கொக்கை ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • கிளென் மேக்ஸ்வெலை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • மிட்செல் மார்ஷை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • மார்கஸ் ஸ்டோனிஸை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • வெங்கடேஷ் அய்யரை ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.
  • ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. அஷ்வினை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவில், “திரும்ப வந்துடேன்னு சொல்லு”, “நாயகன் மீண்டும் வரார்” என பதிவிட்டுள்ளது.

  • ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.
  • ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • ஜேக் ஃப்ரேஸர்-மெக்கர்க்கை ரூ.9 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் ஏலம் எடுத்தது டெல்லி.
  • ராகுல் த்ரிபாதி ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.3.40கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • டெவன் கான்வே ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • தேவ்தத் படிக்கலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
  • எய்டன் மார்க்ரமை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.
  • ஹேரி ப்ரூகை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • கே. எல். ராகுல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • முகமது சிராஜ் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • டேவிட் மில்லரை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. அடிப்படை விலை ரூ. 1.5 கோடியில் இருந்து ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • முகமது சமியை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.
  • ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
  • தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடாவை ரூ. 10.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
  • அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையில் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here