யாழில் கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

0
64

யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here