அம்பாறையில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞர்கள் கைது.!

0
42

அம்பாறை, உஹன பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை உஹன திஸ்ஸபுர பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் ஆவர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 23 ஆம் திகதி அன்று விற்பனை நிலையம் ஒன்றில் போலி நாணயத்தாளை பயன்படுத்தி வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது, போலி நாணயத்தாளை சோதனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here