சில மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – சற்றுமுன் வெளியான அறிவிப்பு.!

0
66

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாளை மாலை 04.00 மணி வரையிலாக பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்கக் கடலில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 530 கி.மீ. இல் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை நெருங்கி ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன்படி, வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும்.

அமைப்பின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்லவேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதன்கிழமை (நவம்பர்-27) வரை எதிர்வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாளை மாலை 04.00 மணி வரையிலாக பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்கக் கடலில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 530 கி.மீ. இல் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை நெருங்கி ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன்படி, வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும்.

அமைப்பின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்லவேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதன்கிழமை (நவம்பர்-27) வரை எதிர்வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here