நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன 6 பேரும் சடலம் மீட்ப்பு.! Video

0
78

நேற்று முன் (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதன்படி, 6 பேர் காணாமல் போன நிலையில் இருவரின் சடலம் அன்றே கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் மேலும் இரு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

இன்று (28) காலை இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர், அதில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here