நாட்டில் நேற்று (02) நடந்த வாகன விபத்துக்களில் 5 பேர் பலி.!

0
117

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) கஹதுடுவ, ஹங்வெல்ல, கிரிந்த, மாத்தறை மற்றும் பல்லம பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கொட்டாவை – தலகல வீதியின் குருந்துவத்தை வீதிக்கு திரும்பும் சந்தியில் வீதியைக் கடந்த பாதசாரி மீது கார் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அவிசாவளை – கொழும்பு பழைய வீதியின் ஹங்வெல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பெண், சாலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார் 75 வயதுடைய வெலிகன்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திஸ்ஸமஹாராமய – கிரிந்த பிரதான வீதியில் சுதுவெலிபெலஸ்ஸ சமாதான மாவத்தை சந்தியில் சஃபாரி ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிரிந்த பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவராவார்.

இதேவேளை, மாத்தறை – ஹக்மன வீதியில் ரயில் நிலைய வீதியை நோக்கித் திரும்பும் சந்தியில் வீதியைக் கடந்த பாதசாரி மீது கார் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 76 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஆனமடுவ – பங்கதெனிய வீதியில் வெந்தகடுவ தேவாலயத்திற்கு முன்பாக, எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதுடன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.

மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here