தேங்காய் பறிக்க சென்றவர்க்கு குரங்கினால் வந்த விபரீதம்; பறிபோன உயிர்.!

0
65

குரங்கு பறித்த குரும்பை நபர் ஒருவரின் கழுத்தில் வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்த சம்பவம் புலத் கொஹுபிட்டிய, மேல் நியூமீர், பிரிவு இலக்கம் 3 இல் இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில் இருந்து வீழ்ந்து கிடந்த தேங்காய்களை கடந்த 27ஆம் திகதியன்று பொறுக்கிக் கொண்டிருந்த போது, தென்னை மரத்தில் இருந்து குரும்பையைக் குரங்கு பிடிங்கியுள்ளது. அதன்போதே அந்தக் குரும்பை, மேற்படி நபரின் கழுத்துப் பகுதியில் வீழ்ந்துள்ளது.

அந்த நபர் உடனே கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here