அதிசொகுசு அரச வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்.!

0
35

அரச நிறுவனங்களில் அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒருசில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வாகனங்கள் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொண்டு, சுங்க இயைபு முறைக் குறியீடு (HS Code) 87.03 இன் கீழுள்ள பெற்றோல் 1800 cc கொள்sளவுக்கு அதிகமான வாகனங்கள் மற்றும் 2300 cc கொள்ளளவுக்கு மேற்பட்ட டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள வாகனங்கள் (டபள் கப்வண்டி/சிங்கல் கப் வண்டி/வான்/பஸ் வண்டி முறையான பெறுகை முறைமையைக் கையாண்டு 2025.03.01 திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மூலம் பாவனையிலிருந்து அகற்றுவதற்கும், அதற்கிணங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு திறைசேரியின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here