இலங்கையில் அறிமுகமான புதிய மின்சார ஸ்கூட்டர்கள்.!

0
103

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான Ather Energy, அதன் Ather 450X மின்சார ஸ்கூட்டரை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் Ather Energy இன் தேசிய விநியோகஸ்தராக செயற்படும் Atman Group மற்றும் Sino Lanka Private Limited ஆகியவற்றின் கூட்டு முயற்சியான Evolution Auto (Pvt) Ltd. மூலம் இந்த அறிமுகம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில், Ather Energy நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Ather Energy பிரதம வணிக அதிகாரி Ravneet Phokela மற்றும் விற்பனை, சேவை வழங்கல், உதவி வழங்கல் தலைவர் Gurinder Singh உள்ளிட்ட அந்நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Evolution Auto சார்பில் Sino Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவர் Bob Kundanmal, Sino Lanka Private Limited பணிப்பாளர் Dhiren Kundanmal மற்றும் Atman குழுமத்தின் பணிப்பாளர்களான நாதன் சிவஞானநாதன், ரஞ்சித் லியோன் ஆகியோருடன் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவும் கலந்து கொண்டார்.

Ather 450 ஆனது, அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதோடு, இணையற்ற சவாரி அனுபவத்தை வழங்குகிறது. வலுவான மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர், விரைவாக உயர் வேகத்தை அடைவதோடு, மணித்தியாலத்திற்கு 90 கி.மீ. வரையான வேகத்தை அடைகிறது. நிகழ்நேர பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் வழிகாட்டல் அம்சங்களைக் கொண்ட ஆற்றல்மிக்க டேஷ்போர்ட், இருக்கைக்கு அடியிலான விரிவான சேமிப்பக பகுதியையும், மீளுருவாக்க பிரேக், 60 நிமிடங்களில் 80% சார்ஜ் செய்யக்கூடிய வேகமான சார்ஜிங் திறன் ஆகியன இதன் முக்கிய அம்சங்களாகும். ஒருதடவை சார்ஜ் செய்தால் 111 – 150 Km வரை செல்ல முடியும் என கூறப்படுகின்றது.

Ather 450X இன் அறிமுகமானது கட்டுப்படியான விலையில், நம்பகமான மின்சார வாகனங்கள் மூலம் இலங்கையில் நிலைபேறான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும். Evolution Auto (Pvt) Ltd. நிறுவனமானது, நாடு முழுவதும் Ather Grid விரைவு சார்ஜிங் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ திட்டமிட்டுள்ளதோடு, இது மின்சார வாகனங்களை அனைவரும் இலகுவாக அணுகக்கூடியதாகவும் வசதியானதாகவும் மாற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here