4 வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது.!

0
73

4 வலம்புரி சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் மாதம்பை மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மாதம்பை மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here