மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விடுதி – சிக்கிய பெண்கள்.!

0
143

களுத்துறை வடக்கு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார சேவை நிலையத்தை சுற்றிவளைத்த மூன்று பெண்களும் அவர்களது முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, புளத்சிங்கள மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், முகாமையாளர் மொரட்டுவையைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய முகவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 4,000 ரூபாய் பெறுமதியான சேவைகளை வழங்கியுள்ளதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here