காத்தான்குடியில் சுற்றுலா பயணிகளின் நகைகள் மற்றும் பணம் கொள்ளை – சிக்கிய நபர்.!

0
46

உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

43 வயதுடைய போதைப்போருள் பாவனைக்கு அடிமையான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி – ஜின்தோட்டையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர், காத்தான்குடி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, சுற்றுலா விடுதி உள்ளே நுழைந்து, பணம் மற்றும் நகைகளை திருடிய நபர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்

37 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 15000 ஆயிரம் ரூபாய் என இருவரிடம் பணத்தையும், மேலும் சிலரிடம் நகைகளையும் குறித்த நபர் திருடியுள்ளார்.

அத்தோடு திருடிய நகைகளை வாழைச்சேனையிலுள்ள நகைக்கடையில் விற்பனை செய்துள்ளதுடன், திருடிய பணத்தில் சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வாங்கி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மீதமாகவிருந்த இரு நகைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here