அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் உடனே அறிவியுங்கள்.!

0
93

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“எனவே, வர்த்தக சமூகம், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நாங்கள் அறிவித்த விலைக்கு ஏற்ப அரிசியை கொள்வனவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முறைகேடாக அல்லது அதிகப்படியாக அரிசி விற்பனை நடந்தால், நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம். மேலும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யலாம்.”

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வௌியீடு.!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி…

🛑ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛑ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி..

🛑ஒரு கிலோகிராம் உள்நாட்டு கிரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இதன்படி…

🛑இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

🛑மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here