டிசம்பர் 14 ஆம் திகதி சனிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
72

மேஷம்:
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

ரிஷபம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது.

மிதுனம்:
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. விருந்து விசேஷங் களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

கடகம்:
அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.

சிம்மம்:
உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

கன்னி:
சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:
மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

விருச்சிகம்:
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

தனுசு:
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

மகரம்:
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகி விடும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத் தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கும்பம்:
மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

மீனம்:
எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here