புத்தளம் பகுதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலெயே உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் சேத்தாப்பலை பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாலாவி பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது லொறியில் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன் போது இரண்டு பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்த இருவரும் மாம்புரி மற்றும் தழுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.