யாழில் எலிக் காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு.!

0
91

யாழில் எலிக்காய்ச்சலில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் சுகயீனமுற்று யாழ் பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு சனிக்கிழமை 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் யாழ் கரவெட்டி தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை இந்த எலிக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here