வவுனியாவில் வனயீவராசிகளின் திணைக்களத்தில் பணியாற்றும் இளைஞன் சடலமாக மீட்ப்பு.!

0
279

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மாலை குறித்த இளைஞன் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து நீண்டநேரமாகிய நிலையில் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில் அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here