50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் – ஒருவர் உயிரிழப்பு..!

0
59

மாத்தளை, ரிவஸ்டன் – லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று இன்று (15) பிற்பகல் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here