சற்றுமுன் நடந்த விபத்தில் யுவதிக்கு நேர்ந்த சோகம்.!

0
273

சற்றுமுன் கண்டி ஹிரஸ்ஸகல பிரதேசத்தில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள், தனியார் பஸ்சுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த யுவதி கீழே விழுந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அப்போது மற்றுமொரு வாகனத்தின் சில்லுக்குள் சிக்குண்டே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here