தர்மபுரம் பொலிஸார் மீது தாக்குதல்.. 3 பேர் கைது.!

0
29

தர்மபுரம் பொலீசார் சுண்டிக்குளம் பகுதியில் கடமை நிமிர்த்தம் நின்ற பொலீசாரை தாக்கிய குற்றச்சாட்டில் அதே பகுதியினை சேர்ந்த மூவரை பொலீஸ் கைது செய்துள்ளார்கள்.

ஏ25 சுண்டிக்குளம் சந்தி விசுவமடு பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிலில் சென்றவர்களை சோதனை செய்ய முற்பட்ட போது பொலீசார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுண்டிக்குளம் சந்தியில் கடமையில் நின்ற பொலீசார் இரண்டு உந்துருளிகளில் தலைக்கவசம் இல்லாமல் பயணித்த மூவரை மறித்து சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் நிற்காமல் சென்றுள்ளார்கள், இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது,

பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை குறித்த பகுதியில் கடமையில் தர்மபுரம் பொலீசார் நின்றுள்ளார்கள், இதனை அவதானித்த குறித்த உந்துருளிகாரர்கள் இரண்டு உந்துருளிகளில் வந்து பொலீசார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள்.

கண்ணாடி போத்திலால் பொலீஸ் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் நெத்தியில் காயமடைந்துள்ளதுடன் பொலீசாரின் முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை தர்மபுரம் பொலீசார் கைது செய்துள்ளார்கள், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் தர்மபுரம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here