கணவன் மீது கோபத்தில் தாய் செய்த கொடூரம்..!

0
144

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (23), மற்றும் மகள்கள் கீர்த்தி (5), சங்கீதா(3) ஆவர்.

கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை திருமலை பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள கிணற்றுக்குச் சென்ற அவர் 2 குழந்தைகளையும் தள்ளிவிட்டார்.

ஆனால் பயத்தில் அவர் கிணற்றில் குதிக்கவில்லை. பின்னர் திருமலை பகுதியில் மனக்குழப்பத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று காலை அவரிடம் அப்பகுதியினர் விசாரித்தபோது, தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த மதகுபட்டி போலீஸார் கிணற்றில் கிடந்த இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், ரஞ்சிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here