டிசம்பர் 18 ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
75

மேஷம்:
எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப் படுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

ரிஷபம்:
தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.

மிதுனம்:
இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட் டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கடகம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களால் உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரை யும். தாயின் நீண்டநாளைய விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்:
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனை வழக்கமான நிலையே காணப்படும்.

கன்னி:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். அவர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான முயற்சி அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

துலாம்:
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவது மகிழ்ச்சி தரும். சிலருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நீண்டநாளாகச் செலுத்த நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும்.

விருச்சிகம்:
உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக் கும் வாய்ப்பு உண்டு. தாயின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். அதிகாரிகள் அனுசர ணையாக இருப்பார்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

தனுசு:
அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என் பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியத்துக்காக செலவு செய்யவேண்டி வரும். பயணங்களின்போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கூடுதல் கவனம் தேவை. அலுவல கத்தில் அதிகாரிகள் கண்டிப்பாகப் பேசினாலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

மகரம்:
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

கும்பம்:
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், பிள்ளைகளால் வீண்செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும்.

மீனம்:
வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். தாய்வழி உறவினர் கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here