மலையக மக்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்.!

0
112

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலுடன் மக்களுக்கு மேலும் நலன் சேர்க்கும் வகையில் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு பயனை அடைந்து கொள்ள முடிவதோடு அடையாள அட்டை இன்றி வங்கியில் முடக்கப்பட்ட பணத்தினை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக எமது மலையக மக்கள் பல்வேறு தடங்கல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள்.

இக்கொடுப்பனவுகளை வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான உங்கள் பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொள்வதன் மூலம் தடையின்றி பெற்று கொள்ள முடியும் என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here