யாழ் விபத்தில் பறிபோன 21 வயது இளைஞனின் உயிர்.!

0
94

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண்கும்பான் – கறுப்பாச்சி அம்மன் கோவிலடி பகுதியில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை பகுதியில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மீது, பின்னால் வேகமாக வந்த KTM பைக் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதியான குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காரின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here