சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
இந்த மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்
அவர்களிடமிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள், 12 மடிக்கணினிகள், 20 இலத்திரனியல் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபர்கள் கொழும்பைச் சேர்ந்த 25, 32 மற்றும் 38 வயதுடைய வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.