தாமரை கோபுரத்தை இரவு 11 மணி வரை பார்வையிடலாம்..!

0
16

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தைப் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு வரையும், எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிமுதல் இரவு 11 மணி வரையும் தாமரைக் கோபுரம் திறக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி முதலாம் திகதி ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரை திறக்கப்படவுள்ளதாகக் கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here