மட்டக்களப்பு – மகிழுர் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழுர் பிரதேசத்தை சேர்ந்த சிவகுமார் பிலோமிகா (வயது-17) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவான் தியாகேஸ்வரனின் உத்தரவிற்கமைவாக, சம்பவ இடத்திற்கு சென்று, திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டார்
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது, மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் மற்றுமொரு மாணவி அதிகளவான மாத்திரைகளை அருந்தி உயிரை மாய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.