இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.5262 ரூபாவாக உள்ளது. அத்துடன் டொலரின் கொள்வனவு விலை 289.7312 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 377.3275 ரூபா மற்றும் கொள்வனவு விலை 363.1653 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 313.3850 ரூபா எனவும் கொள்வனவு விலை 300.7847 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.52 ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.29 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 188.81 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.24 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.14 ஆகவும் பதிவாகியுள்ளது.