யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் இன்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பூலோவர் ரமேஷ் வயது – 42 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ் போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றும் யாழில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்பாணம் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய இளைஞரே இவ்வாறு வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னவொரு பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல.. கடந்து செல்வதுதான் வாழ்க்கை, தமிழர் பகுதியில் தற்கொலை சம்பவங்கள் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த தினங்களில் மட்டக்களப்பில் இரு பாடசாலை மாணவிகள் விபரீத முடிவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.