காதலித்து வந்த காதலன் உல்லாசம் அனுபவித்த பிறகு தன்னை ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாட்தவாலா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 8 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் மகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து காதலி கேள்வியெழுப்பிய நிலையில், முசாபர்நகரில் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் ஓட்டல் அறைக்கு இளைஞர் நேற்று தனது காதலியை அழைத்துள்ளார்.
ஹோட்டல் அறைக்குச் சென்ற காதலி, அப்போது திருமண ஏற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பி, தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறாயா? என தனது காதலனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில் இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டினார். இதனால் காதலனின் வலியில் அலறி துடித்துள்ளார்.
இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இளைஞரிடம் வாக்குமூலம் பெற்று காதலியைத் தேடி வருகின்றனர்.
காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.