முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்கினால் அது அவசியம் என்று திருப்தியடைய முடியும் எனவும் பொருளாதார காரணங்களுக்காக முப்படையினரையும் நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கோட்டஹச்சி, சட்டத்தரணி என்ற வகையில் கூறியுள்ள கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்த ரவீந்திர ஜயசிங்க, உகண்டா அறிக்கை போன்று இதுவும் மக்களை தவறாக வழிநடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.