16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் கைது.!

0
134

பல காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மாணவி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டதாக காலி நாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

நாகொட பாடசாலை ஒன்றின் 16 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரில் முதலாம் சந்தேக நபரான மாணவன் அதே பாடசாலையில் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வீடியோ அழைப்புகள் மூலம் இருவரும் பேசிக் கொள்கின்றனர். ஒரு நாள் மாணவி தனது மேல் உடலை அவருக்கு வெளிப்படுத்தினார், சந்தேக நபர் அந்த காட்சியை வீடியோவில் பதிவு செய்தார்.

பின்னர், சந்தேக நபர் அந்த காட்சியை காட்டி வேறு பலன்களை பெற்றுக் கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களில் முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here