நடிகை சித்ராவின் தந்தை எடுத்த முடிவு.!

0
192

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில், மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், ஹேமந்த் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஹேமந்தை விடுவித்தது. மகள் சித்ராவின் தற்கொலைக்கு பின்னரே மன அழுத்தத்தில் இருந்து வந்த சித்ராவின் தந்தை, ஹேமந்த் விடுதலைக்குப் பின்னர் அதிகளவில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் சித்ராவின் துப்பாட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பரில் பூவிருந்தவல்லி அருகே விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தை இன்று தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவான்மியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here