வவுனியாவில் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
94

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதியொருவர் பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.

அவ்வேளை சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த பேருந்துடன் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here