கணவனுக்கு மனைவியால் நேர்ந்த சம்பவம்.. ‘என் மகளை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை’.. கதறிய தாய்..!

0
125

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சிக்கோடியில் உள்ள உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாலே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

தினக்கூலியாக வேலை பார்க்கும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு சாவித்திரியை அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் புதிய பைக் வாங்க நினைத்த ஸ்ரீமந்திடம் பைக் வாங்க போதிய பணம் இல்லை. இதனால் விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்குமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சாவித்திரி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீமந்த், மனைவியை சரமாரியாக தாக்கினார்.

இந்நிலையில் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஸ்ரீமந்த், மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி உடலுறவு கொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஆசையை கட்டுப்படுத்த முடியாத ஸ்ரீமந்த், தனது 13 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சாவித்திரி, ஸ்ரீமந்த் தலையில் பெரிய கல்லை வீசினார். இதில், ஸ்ரீமந்த் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இறந்தது தெரிந்த பிறகும் அரிவாளைக் கொண்டு வந்து கணவனின் உடலை இரண்டாக வெட்டினார்.

பின்னர், கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டில் உள்ள சிறிய டிரம்மில் போட்டு, உருட்டி எடுத்து சென்றார். பின்னர் டிரம்மில் இருந்த உடல் துண்டுகளை வயலில் வீசினார். கொலைக்கு பயன்படுத்திய கல் மற்றும் அரிவாளை கிணற்றில் வீசியுள்ளார். பின்னர், டிரம்மையும் நன்கு கழுவி விவசாய கிணற்றில் வீசினார். பின்னர் ரத்தக்கறை படிந்த மெத்தை மற்றும் துணிகளை கிணற்றுக்குள் வீசினாள். வீட்டில் இருந்த தடைகளை எல்லாம் மறைத்து, நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தன் மகள்களிடம் கூறினார்.

ஆனால், விடிந்ததும் ஸ்ரீமந்த் வயலில் பிணமாக கிடந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிகோடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நடந்த அனைத்தையும் சாவித்திரி ஒப்புக்கொண்டார். மேலும், “என் மகளைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. நான் ஜெயிலுக்குப் போனால் என் பிள்ளைகள் அனாதைகளாகி விடுவார்கள்.. என்னை விட்டுவிடுங்கள்” என்றார். ஆனால், போலீசார் சாவித்திரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here