நுவரெலியாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகத்தின் உரிமையாளர் ஒருவரை குற்றத் தடுப்பு பிரிவினர் திங்கட்கிழமை (06) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மருந்தக உரிமையாளர் ஒருவர் 15,000 ரூபாய்க்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வதாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சந்தேக நபரிடமிருந்து ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.