பகீர் வீடியோ.. நடிகர் அஜீத் சென்ற ரேஸ் கார் விபத்து..!

0
131

நடிகர் அஜீத் சென்றுக் கொண்டிருந்த ரேஸ் கார் சுழன்றடித்து மோதி விபத்திற்குள்ளான வீடியோ பதைபதைக்க வைக்கிறது. நல்வாய்ப்பாக தல அஜித்துக்கு காயம் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

துபாயில் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த வீடியோ ஏற்கனவே வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு காயமில்லை என தகவல்கள் தெரிவிகின்றன.

அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் கார் சுழன்று நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கிய அஜித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி செய்து பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றி உள்ளனர்.